;
Athirady Tamil News

மோடியின் இலங்கை வருகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது, “இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்தார்.

மோடியின் இலங்கை வருகை
இந்தியா (India) என்பது எமது பெரிய அண்ணன். எனவே, அந்நாட்டுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியது அவசியம்.

இந்தியப் பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விபரம் இன்னும் உறுதியாகவில்லை. ஓகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம்.

அடுத்த அதிபர் ரணில்
ஏனைய அயல் நாடுகளை விடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனையைக் கொண்டுள்ளது.ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின் அணுகுமுறையும் இதற்குச் சான்றாகும்.

இலங்கையின் அடுத்த அதிபர் ரணில் (Ranil Wickremesinghe) தான் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரிந்துள்ளது.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.