மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி பெண் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (14) காலை மிட்டியாகொட, வெரெல்லான , முத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
வெரெல்லான ரயில் பாதைக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் காலியிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் காயமடைந்து பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மிட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.