;
Athirady Tamil News

அமெரிக்காவுக்கு செக் வைத்த சீனா: நாடுகளுக்கிடையில் போர் மூளும் அபாயம்

0

தென் அமெரிக்காவுக்குள் நுழையச் சீனா(China) ஒரு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், அமெரிக்கா சீனா இடையே மறைமுக போர் உருவாகலாம் என சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும்(America) சீனாவுக்கும் இடையே கடந்த பல காலமாகவே மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா இப்போதுசெயல்படுத்தும் ஒரு திட்டம் சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தென் அமெரிக்காவில் சீனா ஒரு துறைமுகத்தை உருவாக்கி வரும் நிலையில், இத்திட்டத்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வலை விரிக்கும் சீனா
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள முக்கியமான நாடான பெரு சுற்றுலாத் துறையை நம்பி இருக்கும் நாடாகும். இங்குள்ள சான்கேய் என்ற நகரில் தான் இப்போது ஒரு பிரம்மாண்ட துறைமுகத்தை சீனா உருவாக்கி வருகிறது.

சுமார் 3.5 பில்லியன் டொலர் மதிப்பில் கட்டப்படும் இந்த துறைமுகத்தை இந்த ஆண்டு இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த துறைமுகமானது தென் அமெரிக்கச் சந்தைக்குள் நுழைய சீனாவுக்கு இலகுவான வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.

இந்த துறைமுகம் திறக்கப்பட்டால் ஆசியா(Asian) மற்றும் தென் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் மேம்படுவதோடு சீனாவில் இருந்து தென் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகரிக்கும். தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை உள்ள மற்ற துறைமுகங்களால் பெரிய கப்பல்களைக் கையாள முடியாது.

வசமாக சிக்கும் தென் அமெரிக்க நாடு
ஆனால், இந்த துறைமுகம் 60 அடி ஆழம் இருப்பதால் மெகா கப்பல்களையும் இது இலகுவாக கையாளும் என்று கூறப்படுகிறது. தென் அமெரிக்காவில் சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்கா தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த துறைமுகம் ஒரு சவாலாக உள்ளது.

இதைச் சீனா கட்டுவதால் முக்கிய கட்டுப்பாடுகளும் அவர்கள் வசம் இருப்பதால் தென் அமெரிக்காவின் வளங்கள் மீதான சீனாவின் பார்வை அதிகரிக்கும்.

அதாவது இயற்கை வளங்களால் நிரம்பி இருக்கும் இந்த பிராந்தியத்தைச் சீனாவால் எளிதாக அணுக முடிவதால் இங்குள்ள இயற்கை வளங்களைச் சீனாவால் எளிதாக எடுக்க முடியும்.

போர் மூளும் அபாயம்
எனவே இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி வருவதோடு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இது மறைமுக போரைக் கூட தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும், இத்திட்டத்தால் முழு பயனையும் சீனாவே அடையும் என் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளதுடன் மேலும், சரியாகக் கையாளவில்லை என்றால் இந்த நிலைமை பெருவுக்கு மொத்தமாக எதிராக மாறிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஏனென்றால் இப்போது பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் சீனா இதுபோன்ற திட்டங்களைத் தான் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.