;
Athirady Tamil News

ஜி-7 மாநாட்டின் ஆரம்பம்: இத்தாலிய நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்

0

தெற்கு இத்தாலி (Italy) மக்களிடையே ஏழ்மை அபாயம் உள்ளதாக நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜி-7 நாடுகளின் ஏழு நாடுகளின் தலைவர்களின் மாநாடு தெற்கு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலால் இத்தாலி அரசு மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜி-7 நாடுகளின் தலைவர்களின் மூன்று நாள் உச்சி மாநாடு இன்று (15) நிறைவடையவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் (UN) மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) உட்பட 6 வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்கள் இதில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலி அரசு கண்டனம்
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இத்தாலிய வெளிவிவகார அமைச்சர், அரசியல் முரண்பாடுகளை மோதலின்றி தீர்த்து வைப்பது இரு கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு அரச தலைவர்களின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நாடாளுமன்றத்தில் இவ்வாறான மோதல் ஏற்பட்டமை வருத்தமளிக்கும் விடயம் எனவும் இத்தாலி வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.