போர் நிறுத்தத்திற்கு தயார்… ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவிப்பு
உக்ரைன் மீதான போரை கைவிட தாம் தயாரென அறிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஏற்க முடியாத கடும் நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார்.
உக்ரைன் துருப்புகள்
உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விளாடிமிர் புடின், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் துருப்புகள் வெளியேற வேண்டும் என்றும், நேட்டோவில் இணையும் கனவை கைவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், பேச்சுவார்த்தையை உடனையே முன்னெடுக்கவும் ரஷ்யா தயார் என அறிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உக்ரைன் துருப்புகள் வெளியேறத் தொடங்கியதும்,
நேட்டோவில் இணைவதை கைவிட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், ரஷ்யா தரப்பில் உடனடியாக போர் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படும், அது அடுத்த நாளே தொடங்கவும் ரஷ்யா தயாராக உள்ளது என்றார்.
ஒப்பந்தம் நிரந்தரமானது
புடின் விதித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் நாட்டவர்கள் வெளியேற வேண்டும்.
இதன் பின்னர் முன்னெடுக்கப்படும் ஒப்பந்தமானது நிரந்தரமானது என்றும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு தொடர்பில் இதுவரை உக்ரைன் தரப்பில் பதிலேதும் தெரிவிக்கப்படவில்லை.