அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்., பாதுகாப்பு தீவிரம்
த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில், இந்த புகழ்பெற்ற கோவிலுக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்பு மிரட்டல் வந்தது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம் என பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு (Jaish-E-Mohammed) எச்சரித்ததாக ஓடியோ செய்தி கசிந்துள்ளது.
அந்த ஓடியோவில் ராமர் கோவில் மீது வெடிகுண்டு தாக்குதல் இருப்பதாக தேசிய ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்டன.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் எச்சரிக்கையால் அயோத்தி பொலிஸார் உஷார்படுத்தப்பட்டனர். ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமர் கோயிலுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வருவது இது முதல் முறையல்ல. 2023-ஆம் ஆண்டிலும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் பின்னர் அந்த மிரட்டல்கள் போலியானது.
இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு ஏற்றிய ஜீப் ஒன்று ஆலயத்தில் நாசத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால், அப்போது தேசப் பாதுகாப்பு குறித்து கடும் கவலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சமீபத்திய ஓடியோ எச்சரிக்கையை பொலிஸார் தீவிரமாக எடுத்து வருகின்றனர். அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.