கதிர்காமம் பிரதேசத்தில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எசல பெரஹர
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.