;
Athirady Tamil News

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து காவல்துறையினரால் கிட்டத்தட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம்
மாதாந்தம் கிட்டத்தட்ட 300, 000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாரதிகளின் புள்ளிகள் குறைப்படும்.

மொத்தமான 24 புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் வழங்கப்படும் நிலையில் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றால் 10 புள்ளிகள் குறைக்கப்படும்.

குடி போதை
குடி போதையில் வாகனம் ஓட்டினால் ஆறு புள்ளிகள் குறைக்கப்படுவதுடன் 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.

இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பரீட்சை எழுதி சாரதி அனுமதி பத்திரம் பெறும் பாடசாலைக்கு சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும்.

விதிகளை மீறும் சாரதிகளுக்கு பயிற்சியளித்த தரப்பினர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.