பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்: பின்னணி
பிரித்தானியா முழுவதும், சில பல்பொருள் அங்காடிகள் சாண்ட்விச் முதலான 45 உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளன.
ஈ கோலை என்னும் ஒரு கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்
பிரித்தானியாவிலுள்ள Asda, Morrisons மற்றும் Sainsbury’s முதலான பல்பொருள் அங்காடிகளுக்கு உணவுப்பொருட்களை விநியோகிக்கும் Greencore நிறுவனம், 45 உணவு வகைகளையும், Tesco மற்றும் One Stop ஆகிய பல்பொருள் அங்காடிகளுக்கு உணவுப்பொருட்களை விநியோகிக்கும் Samworth Brothers Manton Wood நிறுவனம், 15 உணவுப்பொருட்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
கிருமி பாதிப்பு இருக்கலாம் என அச்சம்
இந்த மாத துவக்கத்தில், ஒரு உணவுப்பொருளில், ஈ கோலை என்னும் கிருமியின் பாதிப்பு காரணமாக 113 பேர் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இம்முறை அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாவிட்டாலும்கூட, சில உனவுப்பொருட்களில் இந்த ஈ கோலை என்னும் கிருமியின் பதிப்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த உணவுப்பொருட்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
அந்த உணவுப்பொருட்களை யாராவது வாங்கியிருந்தால், அவற்றை சாப்பிடவேண்டாம் என்றும், அவற்றை திருப்பிக் கொடுத்துவிட்டு, அவற்றிற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன.
எந்தெந்த உணவுப்பொருட்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்பதை கீழுள்ள இணைப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.