ஐஸ்லாந்தில் எரிமலைச் சீற்றம்: மிரள விட்ட விடியோ
ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை கடந்த ஒரு சில நாள்களாக சீற்றத்துடன் காணப்படுகிறது. எரிமலைக்குள் இருந்து லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு மலைப் பகுதிக்குள்ளிருந்த வெளியேறி குழம்பாக நிலத்தில் பாய்கிறது.
மலை உச்சியிலிருக்கும் பிளவிலிருந்து எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறி, வெளியேறி, ஆறாக பூமியில் பல வண்ணக் கோலங்களை போடுகிறது.
இயற்கை என்றாலே அழகு என்று மட்டும் நினைத்திருந்தால், இந்த விடியோ நிச்சயம் அந்த எண்ணத்தை மாற்றிவிடும். அப்பகுதியில் இருப்பவர்களும் சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆய்வாளர்களும், இந்த எரிமலைக்கு அருகே நின்றுகொண்டு, நெஞ்சை உறையவைக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர், கண்களால் அனைத்தையும் சிறைவைக்க முடியாது என்பதால், தங்களது செல்ஃபோன், கேமரா மூலம் விடியோக்களாகப் படம்பிடித்துக்கொள்கிறார்கள்.
Volcano Tourism in Iceland 🌋 pic.twitter.com/0ESofMtQQO
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 14, 2024
அந்த விடியோக்கள் சமூக வலைங்களில் வைரலாகியிருக்கிறது. இயற்கைக்குள் இத்தனை சீற்றமா, இத்தனை தீப்பிழம்பா என்று பார்ப்பவர்களை கேள்வி கேட்க வைக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்த எரிமலை முதல் முறையாக சீற்றமடைந்தது. அப்போது 600 அடிக்கு எரிமலைச் சீற்றம் காணப்பட்டுள்ளது. இதற்கு முனபு சுமார் 800 ஆண்டுகள் வரை இங்கு எந்த எரிமலைச் சீற்றமும் நிகழவில்லை. அதன்பிறகு அவ்வப்போதுசிறு எரிமலைச்சீற்றங்கள் காணப்படடு வந்த நிலையில் தற்போது மிக மோசமான எரிமலைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது.