நான் தான் கடவுள் – ஆடைகளை அவிழ்த்தபடி காவல் நிலையத்திற்குள் சென்ற அகோரி
பல்வேறு மண்டை ஓடுகளுடன் கூடிய அகோரியின் காரல் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்க்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்த கிரிவல பாதைகளில் ஏராளமான சாதுக்களும் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், தேரடி வீதியில் மண்டை ஓடுகளுடன் கூடிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நம்பர் பிளேட்க்கு பதிலாக அகோரி நாகசாது என்று எழுதப்பட்டிருந்தது. இதனை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காவல் துறை
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பல்வேறு மண்டை ஓடுகளுடன் கார் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் கழித்து நெற்றி நிறைய விபூதி, கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையுடன் அகோரி போன்று தோற்றமளித்த ஒருவர் காரின் உரிமையாளர் எனக் கூறிக்கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்குள் அழைத்த போது, என் பெயர் கடவுள். நானே சிவன், பிரம்மா, விஷ்ணு எனக் கூறிக்கொண்டு உடலில் உள்ள ஆடைகளை அவிழ்த்து கொண்டே காவல் நிலையத்திற்குள் வந்தார்.
உடனே அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், காருக்குள்ளேயே வைத்து விசாரணை நடத்தினர்.
அபராதம்
விசாரணையில், ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், வாகனத்தை நிறுத்த இடம் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதற்க்காக அபராதம் விதித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.