வெளிநாடொன்றில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மந்திர கல்: எந்த நாட்டில் தெரியுமா..!
துருக்கியில் (Turkey) ஆசைகளை நிறைவேற்றும் கல் ஒன்றை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய துருக்கியில் உள்ள இந்த கல்லை உள்ளூர்வாசிகள் ஹட்டுசா என அழைப்பதாகவும் இது மனிதர்களின் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் கல் என்றும் நம்புகின்றனர்.
உண்மையான வரலாறு
பழங்கால கோவிலின் அருகில் உள்ள இந்த மென்மையான பச்சை பாறையின் உண்மையான வரலாறு தொடர்பில் கண்டறியப்படவில்லை.
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறும் போது கல் இருக்கும் பழங்கால கோவில், ஹிட்டிட் பேரரசின் தலைநகரான ஹட்டுசாவின் பகுதி என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஆட்சியில் இருந்த ஹிட்டியர்கள் இனம் இந்த கல்லினை சிலைக்கான தளமாக வைத்திருக்காலாம் என்றும் ராஜா அமரும் சிம்மாசனமாகவோ அல்லது பலிபீடமாக அமைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆன்மிக நம்பிக்கை
மேலும், ஹிட்டியர்கள் அதிக ஆன்மிக நம்பிக்கையும் வானியல் அறிவும் உள்ளவர்களாக இருந்திருக்கலாம் என்றும் சூரியனின் திசை நேரத்தை அளவிட இந்த கல்லை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்த பச்சை நிற கல்லின் எடை சுமார் 2,200 பவுண்டுகள் என கூறப்படும் நிலையில் இந்த கல் அருகில் உள்ள டாரஸ் மலைகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.