சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு: பொது மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
அந்த வகையில், கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியுடன், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பல காரணிகளால் கட்டுமானத் துறையின் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்திருந்தன.
எவ்வாறாயினும், பொருளாதாரம் மீட்சியடைந்துள்ள நிலையில், தற்போது அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலைகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர (Supun Abeysekara) , ”கடந்த காலத்தில் கட்டுமானத் துறை முற்றிலும் சரிந்திருந்தது. இன்று, இத்துறையில் ஓரளவு மீட்சி ஏற்பட்டுள்ளது.
சீமெந்து, இரும்பு, நிறப்பூச்சு போன்ற மூலப்பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு குறைந்துள்ளது. மொத்தத்தில் வங்கி வட்டி குறைந்துள்ளதால் மகிழ்ச்சி அடையலாம். எமது வாடிக்கையாளர்கள் வங்கிக் கடனை பெற்று வீடு கட்டும் சூழல் ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.