ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிர் ஊசலாடும் காசா குழந்தைகள் : ஐநா அபாய அறிவிப்பு
காசாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சுமார் 50,000 குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க இஸ்ரேலியப் படைகள் அனுமதிக்காத காரணத்தினால் காசா மக்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு
50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது என்றும் ஐநா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
காசா பகுதிக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதால் நாளுக்கு நாள் நிலைமை தீவிரமடைந்து வருவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
அதிகளவான உதவிப் பணியாளர்கள் படுகொலை
மேலும், இதுவரை உலகில் நடந்த எந்தப் போரை விடவும் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் அதிகளவான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது.