மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று “spaceX” நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ரொபேட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால் (AI) ஹேக் (Hack) செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான முறைகேடுகள்
மேலும், ரொபேட் எஃப் கென்னடி ஜூனியர் (Robert F. Kennedy Jr) தனது எக்ஸ் (X) பதிவில், “போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன
We should eliminate electronic voting machines. The risk of being hacked by humans or AI, while small, is still too high. https://t.co/PHzJsoXpLh
— Elon Musk (@elonmusk) June 15, 2024
அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால் பிரச்சனை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.