EVM Machine-கள் கருப்பு பெட்டி! எலான் மஸ்க்-கு ஆதரவாக ராகுல் காந்தி
EVM Machineகள் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து புயலை கிளப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ராகுல் காந்தி.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், இவிஎம் ஒரு கருப்பு பெட்டி, அவற்றை சோதனை செய்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன.
பொறுப்புத்தன்மை இல்லாத நிறுவனங்கள் உள்ள போது ஜனநாயகம் போலியானதாகவும், மோசடிக்கு உள்ளானதாகவும் மாறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
EVMs in India are a "black box," and nobody is allowed to scrutinize them.
Serious concerns are being raised about transparency in our electoral process.
Democracy ends up becoming a sham and prone to fraud when institutions lack accountability. https://t.co/nysn5S8DCF pic.twitter.com/7sdTWJXOAb
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2024
இதற்கு முன்னதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும், மனிதர்களால் அல்லது AI ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது என தெரிவித்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்தே ராகுல் காந்தி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.