வெளிநாடொன்றுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான சேவை
இந்தியாவின் (India) தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின் (cambodia) தலைநகர் பினோம் பென்னுக்கும் இடையே முதன் முறையாக நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான சேவையை கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும் கம்போடியாவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடே (Devyani Khobragade) ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
அதன்படி. கம்போடியா அங்கோர் ஏர்’ என்ற விமான சேவை நிறுவனத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 4 விமான சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை வளர்ச்சி
இதேவேளை, இந்த விமான சேவையின் காரணமாக இருநாடுகளினதும் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதுடன், நாடுகளின் உறவுகளும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆரம்பமாகிய விமான சேவை தொடர்பில் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், “இது ஒரு வரலாற்று நிகழ்வு” என தெரிவித்துள்ளது.