உக்ரைன் போரை நிறுத்த புடின் முன்வைத்துள்ள நிபந்தனை
உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
90 நாடுகள் மற்றும் பல உலக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோககில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சிறப்பு அமைதி மாநாட்டிற்கு, ரஷ்ய அதிபர் புடின் தனது மேற்படி நிபந்தனைகளை முன்வைத்தார்.
சர்வதேச அமைதி மாநாட்டில்
சர்வதேச அமைதி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கலந்து கொண்டார்.
ஆனால் ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அமைதி மாநாட்டில் இணைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமைதிக்காக ரஷ்ய அதிபர் புடின் முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.