இளவரசி கேட்டிற்கு ஆச்சரியமான செய்தியை அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆச்சரியமான செய்தியை அனுப்பியுள்ளார்.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி
புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இளவரசி கேட் முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.
Trooping the Colour எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக கேட் அரச குடும்பத்தில் சேர்ந்தார். சனிக்கிழமை மாலை வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியான படங்களை வெளியிட்டனர்.
அத்துடன் ‘நினைவில் கொள்ள ஒரு நாளாக மாற்றியதற்காக’ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான Gwyneth Paltrow சமூக ஊடகத்தில் இளவரசி கேட்டிற்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது Comment ஒன்றில் ”பொதுவாழ்க்கைக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என பதிவிட்டார். இந்த Comment 5,300க்கும் மேற்பட்ட Likesஐ பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் Gwyneth தனது பதிவில், இளவரசியை ‘கருணை மற்றும் வலிமையின் தூண்’ என்று வர்ணித்த அவர், அன்பை அனுப்புவதாக இளவரசி மிடில்டனுக்காக பதிவிட்டிருந்தார்.
நடிகை Gwyneth Paltrow இளவரசி மேகன் மார்க்கலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.