கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படுவதற்கு முன் பறவைக் காய்ச்சலுக்கு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் மனிதர்களிடையே பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் பசும்பாலிலும் இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பதனை அடையாளம் கண்டு பச்சையான பாலை அருந்த வேண்டாம் என தடை விதித்திருந்தது.
மிக மோசமான நிலை ஏற்படலாம்
அத்துடன், அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களில் காணப்படும் 29 பண்ணைகளில் இருக்கும் கோழிகள் மற்றும் பசுக்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பசு மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்5என்1 வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதன் காரணமாக 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிக மோசமான பறவைக்காய்ச்சல் பெருந்தொற்றை விடவும் மிக மோசமான நிலை தற்போது ஏற்படலாம் என்ற அச்சத்தை நிபுணர்கள் தரப்பு பதிவு செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி, தற்போது கண்டறியப்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் பாதிப்பானது கோவிட் பெருந்தொற்றை விட தொற்றை விடவும் 40 மடங்கு ஆபத்தானது என்றும் இதனால் இறப்பு எண்ணிக்கையும் பல மடங்காக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.