நடுவானில் தீப்பிடித்த பயணிகள் விமான எஞ்சின்: வீட்டின்மேல் விழுந்துவிடுமோ என பயந்த மக்கள்
விமானம் ஒன்றின் எஞ்சின் திடீரென நடுவானில் தீப்பிடிக்க, அதை கீழேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்களோ, அந்த விமானம் தங்கள் வீட்டின்மீது விழுந்துவிடுமோ என பயந்த திகில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்
திங்கட்கிழமை மாலை 5.50 மணிக்கு, Virgin Australia நிறுவன விமானம் ஒன்று, 73 பயணிகளுடன், நியூசிலாந்தின் Queenstown விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்துக்கு புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவைகள் வந்து மோத, விமான எஞ்சின் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் விமானப்பயணி ஒருவரும், விமான ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளார்கள்.
The engine of an Australia-bound plane caught fire mid-air and landed in New Zealand#Australia #NewZealand #Viralnews pic.twitter.com/jr3Xeb7Thg
— Hello (@hello73853) June 17, 2024
உடனடியாக விமானம் திரும்பி நியூசிலாந்திலுள்ள Invercargill விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. அங்கு தயாராக நின்ற அவசர உதவிக்குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
பயந்த பொதுமக்கள்
இதற்கிடையில், அந்த விமான எஞ்சினில் தீப்பிடிப்பதை பொதுமக்கள் கீழே இருந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் எடுத்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
எஞ்சினில் பற்றியெரியும் தீயுடன், பயங்கர சத்தத்துடன் அந்த விமானம் கீழ் நோக்கி வருவதைக் கண்ட ஒருவர், அந்த விமானம் தன் வீட்டின்மீது விழுந்துவிடுமோ என தான் பயந்ததாகத் தெரிவிக்கிறார்.
விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு மட்டுமின்றி கீழே இருந்த பொதுமக்களுக்கும் திகிலை ஏற்படுத்திய இந்த சம்பவம் எதனால் நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாக Virgin Australia விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.