தபால் மூலம் போதைப்பொருள் கடத்தல்: அதிரடியாக இருவர் கைது
தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளுடன் இருவர் திம்புளை (Dimbula)- பத்தனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மீட்பு
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 900 மில்லிகிராம் ஹசீஸ் எனும் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புளை- பத்தனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.