திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
ருகோணமலை (Trincomalee) செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது, நேற்று (18.06.2024) இடம்பெற்றுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவு
இதன் போது, அவசர சிகிச்சைப் பிரிவு,மக்களின் பாவனைக்காக ஆளுநரால் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் மற்றும் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.