இனி செடி வளர்க்க Visiting Card இருந்தாலே போதும்.., IAS அதிகாரி கண்டுபிடித்த வியப்பான விடயம்
IAS அதிகாரி ஒருவரது Visiting card -யை நாம் நட்டு வைத்தால் செடி வளரும் என்ற செய்தி வியப்படைய வைத்துள்ளது.
யார் அவர்?
தற்போதைய காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களுக்கென்று Visiting card -யை வைத்திருக்கின்றனர். அந்தவகையில் IAS அதிகாரி ஒருவரது Visiting card மட்டும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாங்லி-மிராஜ்-குப்வாட் முனிசிபல் கார்ப்பரேஷனின் IAS அதிகாரி சுபம் குப்தா. இவர், சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் உருவாக்கிய Visiting card -ன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அந்த விசிட்டிங் கார்டில் அவரது பெயர், தொலைபேசி எண், Mail Id, X தள பக்க ஐடி ஆகிய விவரங்கள் உள்ளன.
அதோடு அவர் தனது பதிவில், “இனி என் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இந்த விசிட்டிங் கார்டு கிடைக்கும். இதனை நீங்கள் உங்களது வீட்டில் நட்டு வைத்தால் மஞ்சள் வண்ண செண்டுமல்லி செடி (marigold plant) வளரும்” என்று கூறியுள்ளார்.
அதாவது செடி வளரக்கூடிய இந்த விசிட்டிங் கார்டில் விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், இது மாதிரியான மறுசுழற்சி செய்யக்கூடிய கார்டுகளை எங்கு அச்சடிக்கலாம் என்பதை பகிருங்கள் என்று பலரும் கேட்கின்றனர்.