;
Athirady Tamil News

தண்ணீ பவுசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்

0

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால் , காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது , கல்லுண்டாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் விபத்துக்கு உள்ளான வாகனங்கள் இரண்டையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் , பவுசர் சாரதியையும் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பவுசரை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அதனால் காரைநகர் பகுதிக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் , அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

அதனால் , தண்ணீர் பவுசரை பொலிஸார் விரைவில் நீதிமன்றில் பாரப்படுத்தி , வாகனத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.