;
Athirady Tamil News

105 வயதில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மூதாட்டி

0

கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த பிறகு, சிலர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற மறந்து விடுகிறார்கள்.

அல்லது பிஸியான நாட்களில் இந்த வேலையை அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

படிப்பை முடித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பட்டமளிப்புச் சான்றிதழைப் பெற்ற பலர் உள்ளனர்.

அதாவது 5 வருடங்கள், 10, 20, அதிகபட்சம் 25 ஆண்டுகள் கழித்து பட்டமளிப்புச் சான்றிதழைப் பெற்ற சிலரும் உள்ளனர்.

ஆனால் இங்கு ஒரு பாட்டி முதுகலைப் பட்டம் முடித்து சரியாக 83 வருடங்கள் கழித்து பட்டமளிப்புச் சான்றிதழைப் பெற்ற சம்பவம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது.

105 வயதான வர்ஜீனியா ஜிஞ்சர் ஹிஸ்லாப் (Virginia Ginger Hislop) முதுகலை படிப்பை முடித்து 83 ஆண்டுகள் ஆகியும் அவர் இன்னும் பட்டமளிப்பு சான்றிதழைப் பெறவில்லை.

ஹிஸ்லாப் தனது முதுகலைப் பட்டத்தை 1936 இல் Stanford Graduate School of Education (GSE) மூலம் பெற்றார். கல்வியாண்டின் இறுதியில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த ஹிஸ்லாப், வேலை காரணமாக உடனடியாக வெளியேற வேண்டியதாயிற்று.

இதை தொடர்ந்து கல்லூரியில் கிடைத்த காதலனுடன் திருமணம் நடந்தது. பின்பு குழந்தைகள் என வாழ்க்கை பரபரப்பாக இருந்தது.

கணவர் ராணுவத்தில் இருந்ததாலும், இரண்டாம் உலகப்போரில் தீவிரமாக இருந்ததாலும் குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பது பாரிய சவாலாக இருந்தது. அதனால், கல்லுாரி பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை.

சரியாக 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய ஹிஸ்லாப், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். 105 வயது மாணவிக்கு வேந்தர் பட்டமளிப்பு சான்றிதழை வழங்கினார்.

பட்டத்தை கையில் வாங்கிய ஹிஸ்லாப் “இதற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன்” என்று மகிழ்ச்சியடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.