ஆரோக்கியத்தை அள்ளித்தரும் செவ்வாழை… எந்த நேரத்தில் சாப்பிடணும்னு தெரியுமா?
சாதாரண வாழைப்பழத்தைப் போல செவ்வாழையிலும் அதிக சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கியிருக்கிறது.
அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிடுவது அதிக பலன்களை பெற்றுக்கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
செவ்வாழையில் பொட்டசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமிக் சி, தையமின் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
சிவப்பு வாழைப்பழத்தில் ஏராளமான கரோட்டினாய்டுகள், ஃபிளாவனல்கள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளன. அதிக கரோட்டினாய்டு உள்ளடக்கம் சிவப்பு வாழைப்பழத்திற்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வழங்குகிறது.
மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கின்றன, இது செல்லுலார் சேதத்தை ஏற்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளிலிருந்தும் பாதுகாக்கின்றது.
எந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது?
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணிக்கு அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடுவதே சிறந்தது.
மற்ற நேரங்களில் சாப்பிடுவதை விட இந்த நேரத்தில் சாப்பிடுவது செவ்வாழைப்பழத்தின் பலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள பெரிதும் துணைப்புரிகின்றது.
உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் அதன் நன்மைகள் நமக்குக் கிடைக்காது. மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவில் சாப்பாட்டுக்கு பின்னர் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
48 நாட்களுக்கு தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடையும் ஆண்மை குறைப்பாடு சீராகும். கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.