;
Athirady Tamil News

வடகொரிய விஜயத்தை தொடர்ந்து புடினின் அடுத்த நகர்வு

0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), இன்று வியட்நாமுக்கு (Vietnam) உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வடகொரியாவுக்கான பயணத்தை தொடர்ந்து, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான (America) உறவுககள் உக்ரைன் போரை அடுத்து சீர்கெட்டு வரும் நிலையில், வியட்நாம் உடன் ரஷ்யா உறவுகளை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளது.

சந்திப்பு
இந்த பின்னணியிலேயே, விளாடிமிர் புடினின் வியட்நாமுக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தின் போது, அந்த நாட்டு முக்கிய தரப்பினரை சந்தித்து ரஷ்ய அதிபர் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பபு உறவுகள்
பொருளாதார, கல்வி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைசார் விடயங்கள் குறித்து இந்த சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, ரஷ்யா மற்றும் வியட்நாமுக்கிடையில் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் சிறந்த இருதரப்பபு உறவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.