மூன்றாம் உலகப்போர்: நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் இந்திய ஜோதிடர்
இந்திய ஜோதிடர் ஒருவர், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்திருந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் அவர்.
இந்திய நாஸ்ட்ரடாமஸ்
இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கடந்த மாதம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைப் பயன்படுத்தி அவர் அதை கணித்துள்ளார். அது, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பயன்படுத்தி, கர்மாவின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு விடயமாக கருதப்படுகிறது.
நான் தவறாக கணிக்கவில்லை
குஷால் குமார், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், தான் தவறாக கணிக்கவில்லை என்று கூறியுள்ளார் அவர். தான் கிரகங்களின் தாக்கத்தின் அடிப்படையிலேயே போரை கணித்ததாக தெரிவிக்கும் குமார், மனித தவறுகளை தவிர்க்கமுடியாது என்கிறார். ஆகவே, போர் இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 29ஆம் திகதி துவங்கலாம் என்கிறார் அவர்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதன் தொடர்ச்சியாக, பால்டிக் கடலில் நேட்டோ அமைப்பின் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 9000 படைவீரர்கள் இம்மாதம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டும் குமார், ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள், வடகொரியாவுக்கு புடின் சென்றது, சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் தென் சீனக்கடலில் நிகழ்ந்த சிறு மோதல் என பல விடயங்களை சுட்டிக்காட்டி, போர் துவங்கலாம் என கருதப்படும் உலக நாடுகளில் நிகழ்ந்துவரும் முக்கியமான மற்றும் அசாதாரண பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள், ஏற்கனவே தான் குறிப்பிட்ட ஜூன் 10 மற்றும் 18ஆம் திகதிகளில் நடந்ததை குறிப்பிட்டு, அவையெல்லாம் தான் முன்னர் கணித்ததை உறுதி செய்வதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.