;
Athirady Tamil News

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை

0

சீனா (China) மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு, இலங்கை தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் சபையுடனான இரண்டாவது சுற்று கலந்துரையாடலை இலங்கை தற்போது முடித்துக் கொண்டுள்ளது.

இதன்படி, இலங்கையை வழிநடத்தும் வேலைத்திட்டம் சரியான பாதையில் செல்வதற்கான உறுதிப்பாட்டை பெற்றுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எதிர்கொண்டுள்ள நெருக்கடி
இந்நிலையில், இலங்கை தற்போது, ​மறுசீரமைப்பு ஏற்பாடுகளை இறுதி செய்ய சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அத்துடன், ஒப்பந்தங்களை எட்டுவதற்கு பாரிஸ் கிளப் மற்றும் பாரிஸ் கிளப் அல்லாத உறுப்பு நாடுகளுடனும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இது குறிக்கிறது.

பொருளாதார வளர்ச்சி
இருப்பினும், இந்த பயணம் இத்துடன் முடிவடையவில்லை. நமது பொருளாதாரச் சவால்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக, பல வாய்ப்புகள் இருந்தபோதிலும், இலங்கை வலுவான ஏற்றுமதித் தொழிலை வளர்க்கவில்லை.

1979ஆம் ஆண்டு சீனா, இலங்கையை விட பொருளாதார வளர்ச்சியில் குறைந்திருந்தது. இன்று சீனா நமக்கு நிதியுதவி செய்கிறது.

எனவே, போட்டிப் பொருளாதாரத்தை வளர்த்து, இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை இலங்கையின் பாதை பிரதிபலிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.