;
Athirady Tamil News

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

0

2006ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு வருகை தந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என துணை ஆணையர் தெரிவித்தார்.

அனைவருக்கும் நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்திருந்தால், அரச பாடசாலைகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பர்.

நிகழ்நிலை விண்ணப்பங்கள்
அவ்வாறு செய்வதால் 13ம் தரம் இல்லாது பாடசாலை கல்வி முறை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே சர்வதேச பாடசாலை மாணவர்கள் அல்லது சாதாரண தரப் பரீட்சை முடிந்து பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு வந்து உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு முன்னர் வேறு தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகப் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அடுத்த மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

கால அவகாசம்
அந்த கால அவகாசம் எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் விண்ணப்பதாரர்கள், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிபர் மூலமாக விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தொலைபேசி செயலிகள் மூலம் நிகழ்நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 இற்கு தொடர்பு கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.