;
Athirady Tamil News

திருக்கோணேஸ்வரம் கோவில் அருகில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை – உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்த கலாநிதி ஆறு.திருமுருகன்

0

திருக்கோணேஸ்வரம் கோவில் அருகில் உத்தரவின்றி அமைக்கப்பட்ட பெட்டிக்கடையில் கசிப்பு விற்பனை செய்யப்படுகின்ற சம்பவம் அறிந்து சைவமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்த அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,

திருக்கோணமலை திருக்கோணேஸ்வரம் அருகே பக்தர்கள் கோவில் வரும் பாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெட்டிக்கடையொன்றில் கசிப்பு குடிவகை விற்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டு ஒருவரை பொலிசார் கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விடயம் சைவமக்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் தரும் செய்தியாகும்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு சைவ நிறுவனங்கள் தொடர்ந்து வேண்டுதல் விடுத்த போதும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.தங்களிடமும் இவ்விடயம் தொடர்பாக முறையிட்ட போதும் இதுவரை பயன் கிட்டவில்லை. புனிதமான வரலாற்றுத்தலமருகே இவ்வாறான சம்பவம் நடைபெறுவது அருவருக்கத்தக்க செயலாகும்.தாங்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உடன் பெட்டிக்கடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.