செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல்
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் இன்று(25) நள்ளிரவு12 மணியளவில் இடம்பெற்றது.
பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு ஆலய பூசகர்கள் பெருங்கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்து விசேட பூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கண்ணகி அம்மனுக்காக பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
காலாதிகாலமாக தொன்றுதொட்டு இடம்பெறும் குறித்த நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.