ஐரோப்பிய நாடொன்றில் தீவிரமாக பரவும் இரண்டு கொடிய நோய்கள்: பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல்
ஸ்பெயின் நாட்டில் தீவிரமாக பரவி வரும் இரண்டு கொடிய நோய்கள் தொடர்பில் அங்குள்ள சுகாதாரத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டறிவது மிகவும் கடினம்
ஸ்பெயினில் தற்போது லைம் நோய் மற்றும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என இரண்டு கொடிய நோய்கள் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் CCAES என்ற சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில் லைம் நோய் என்பது பகரக்கூடிய வியாதியல்ல, குணப்படுத்த முடியும். ஆனால் மாதக்கணக்கில், அதன் அறிகுறிகள் தொடர்ந்து தோன்றும். அது வாழ்க்கைக்கு தீவிரமான மற்றும் செயலிழக்கச் செய்யும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
மட்டுமின்றி, லைம் நோயை உறுதி செய்ய போதுமான மருத்துவ முறைகள் இல்லாததால், அதைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்பது ஆப்பிரிக்கா, பால்க்கன் நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படும் நோயாகும்.
இதன் இறப்பு எண்ணிக்கையும் அதிகம். மிக விரைவாக உறுதி செய்யப்படுவதுடன் உரிய சிகிச்சையும் அளித்தால் மட்டுமே நோயாளிகளை மீட்டெடுக்க முடியும். கடந்த 8 ஆண்டுகளில் 15 பேர்கள் இந்த நோயால் ஸ்பெயின் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரவும் வாய்ப்புகள் அதிகம்
இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே தாங்கள் நம்புவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த நோயில் ஒன்று பிரித்தானியாவுக்கு தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாற இருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.
கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்பது நைரோ வைரஸால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் மூலமாக பரவுகிறது. இந்த நோயால் இறப்பு எண்ணிக்கையும் அதிகம். பாதிக்கப்பட்ட இரத்தம் அல்லது கால்நடைகளின் திசுக்களில் இருந்து இந்த நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம்.
ஆப்பிரிக்கா, பால்க்கன் நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் காணப்பட்ட இந்த நோயானது தற்போது ஸ்பெயினில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிபுணர்கள் தெரிவிக்கையில் இந்த நோய் தற்போது பிரித்தானியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மூக்கில் இருந்து தீவிரமான ரத்தக்கசிவு ஏற்படலாம் என்றும், இரண்டு வாரங்கள் வரையில் இது நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டு வாரத்தில் 30 சதவிகிதம் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி உருவாக்கப்படவில்லை.