;
Athirady Tamil News

குப்பையோடு குப்பையாக மைப்பு போடப்பட்ட 42 பவுண் நகைகள்

0

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பான கடந்த
ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டு
பின்னர் அது கழிவகற்றும் வாகனம் ஊடாக சாவகச்சேரியில் உள்ள குப்பை மேட்டினை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர்கள் இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை காணாமல் போன நகைகள் தொடர்பாக எந்த
விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னராகவும் சாவகச்சேரியில் இது போன்றதொரு சம்பவம் நடந்த நிலையில் சாவகச்சேரி நகரசபையின்
ஊழியர்கள் தேடுதல் நடத்தி தவறுதலாக குப்பை மேட்டை வந்தடைந்த 18 பவுண் நகை களை மீட்டு உரிமையாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.