முட்டை பிரச்சினைக்கு தீர்வாக 160,000 கோழிக் குஞ்சுகள்
முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கும் புதிய திட்டம் ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும் எம்மால் தன்னிறைவு அடைய முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடைகளில் ஒரு முட்டை 50 – 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.