9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய்
மிழக வெற்றி கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் வைர மோதிரத்தை விஜய் வழங்கினார்.
விருது விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கி வருகிறார்.
இதில் முதற்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
9 மாணவர்கள்
இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை விஜய் பரிசாக அளித்தார்.
அந்தவகையில், 12 -ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மல் வழங்கப்பட்டது.
அதேபோல 10-ம் வகுப்பு பொதுத் தேர்தலில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் சந்தியா, திண்டுக்கல்லைச் சேர்ந்த காவியஶ்ரீ, ஈரோடைச் சேர்ந்த கோபிகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவியா ஜனனி, திருநெல்வேலியைச் சேர்ந்த சஞ்சனா ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரைக்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.