;
Athirady Tamil News

நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தம்: ரஷ்யாவிற்கு உக்ரைன் அதிபர் அறிவிப்பு

0

ரஷ்யாவுடனான (Russia) போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்த திட்டத்தை வெளியிடவுள்ளதாக உக்ரைன் (Ukraine) அதிபா் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று முன் தினம்  (29) தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ரஷ்யாவுடன் நடந்துவரும் போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

போா் நிறுத்த ஒப்பந்தம்
எனவே, போர் நிறுத்தத்தை இனியும் தள்ளிப்போட முடியாது. ராஜதந்திர ரீதியில் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. விரைவில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உக்ரைனின் போர் நிறுத்த ஒப்பந்த திட்டம் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆண்டு படையெடுத்தது. தற்போது உக்ரைனின் சுமாா் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.

இருந்தாலும், ரஷ்யாவால் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பிராந்தியங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

போர் முடிவு
அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்டத்தை ரஷ்ய அதிபா் புடின்(Vladimir Putin) கடந்த மாதம் முன்வைத்தாா்.

அதில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களிலிருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேறுவது, நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிடுவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த ஒப்புக்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.