ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்? உக்ரைனுக்கு எதிரான திட்டம்..வெளியான தகவல்
கிம் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களை நிலைநிறுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலத்தடி போர்க் கோட்பாடு
கொரியப் போரில் அதன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பியாங்யாங் தனது சொந்த நிலத்தடி போர்க் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது.
கிம் இல்-சுங் தனது இராணுவத்தை உருவாக்க உத்தரவிட்டிருந்தார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நீண்டு கொண்டிருக்கும் அந்த சுரங்கங்கள் 1970யில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொரியாவின் இந்த நிலத்தடி போர் நுட்பங்கள், மேற்கத்திய அணு ஆயுதங்கள் தாக்குதல்களின் நெருக்கடி சூழலில் உருவாக்கப்பட்டன.
விளாடிமிர் புடின் யுக்தி
இதே யுக்தியை தற்போது விளாடிமிர் புடின் (Vladimir Putin) கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான ஒப்பந்தத்தில், புடின் இந்த நிலத்தடி முகப்பை திறக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளைக் கொண்டு உக்ரைன் எல்லையில் சுரங்கப்பாதையில் அமைக்க உள்ளதாக நம்பப்படுகிறது. ரஷ்யா ஏற்கனவே இருமுறை மோதலில் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ஆய்வாளர் அலெக்சி குஷ்ச் கூறுகையில், ”பல்வேறு ஆதாரங்களின்படி, வடகொரிய இராணுவத்தின் தோராயமாக ஐந்து பொறியியல் படைப்பிரிவுகள் Donbasக்கு வரக்கூடும். அப்படியானால், இது 15,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களாக இருக்கலாம். போர் முழு வீச்சில் இருக்கும்போது அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவது தர்க்கமற்றது” என தெரிவித்துள்ளார்.