இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ஐ.நா குழு கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா குழு ஒன்று கோரியுள்ளது.
இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் (Imran Khan) பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா குழு தீவிர கவலைகளை எழுப்பியது.
அரசியல் உள்நோக்கம்
அவர் மீது போடப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அவரை நாட்டின் அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அக்குழு கூறியது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், ஐ.நா குழுவின் இந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு ”இது உள்நாட்டு விவகாரம்” என பதிலளித்துள்ளது.