கனடாவில் வீட்டு வாடகை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் (Canada) வீட்டு வாடகை அதிகரித்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் பலர், வேறொரு மாகாணத்திற்குச் செல்வது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலானது, Angus Reid Institute (ARI) என்னும் ஆய்வமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.
வீட்டு வாடகை அதிகரிப்பு
குறித்த கணிப்பின் படி, கனடாவின் உயர் வீட்டு வாடகை காரணமாக, கனேடியர்களில் 28 சதவிகிதத்தினர் வேறொரு மாகாணத்திற்குச் செல்வது குறித்து தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
அத்தோடு, 18 சதவிகிதத்தினர் ஆல்பர்ட்டாவுக்கு செல்ல திட்டமிட்டு வரும் நிலையில், நாட்டை விட்டு வெளியேறவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள்.
புலம்பெயர்ந்தோர்
நாட்டில் 16 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சொந்த வீடு இருக்கும் நிலையில், வீடு வாங்குவது பிரச்சினையாக இருந்தது போக, இப்போது வீட்டு வாடகை கொடுப்பதே கடினமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர், உயர் வீட்டு வாடகை காரணமாக, நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.