;
Athirady Tamil News

பிரித்தானிய பிரதமரின் சம்பளம் எவ்வளவு?

0

பிரித்தானிய பிரதமருக்கு இரண்டு வகையான சம்பளம் உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில் ஒரு சம்பளம், பிரதமர் என்னும் முறையில் ஒரு சம்பளம்!

பிரித்தானிய பிரதமரின் சம்பளம் எவ்வளவு?
பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகிப்பவருக்கான ஆண்டு சம்பளம் 172,153 பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 6,71,05,368.50 ரூபாய் ஆகும்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்காக, பிரதமருக்கு 91,346 பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 3,56,06,739.30 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

பிரதமராக இருப்பதற்காக அவருக்கு 80,807 பவுண்டுகள், இலங்கை மதிப்பில் 3,14,98,629.20 ரூபாய் வழங்கப்படும். என்றாலும், இந்த தொகையில் 75,440 பவுண்டுகள் மட்டுமே கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய முன்னாள் பிரதமர்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறார்கள்?
பிரித்தானிய முன்னாள் பிரதமர்கள், தங்கள் பதவிக்கான ஆண்டு வருமானத்தின் 25 சதவிகித தொகையை ஓய்வூதியமாகப் பெற தகுதிப் பெற்றவர்கள் ஆவர்.

மேலும், பொதுப்பணி படிகள் சேர்த்து, முன்னாள் பிரதமர்கள் ஆண்டுக்கு சுமார் 115,000 பவுண்டுகள் வரை ஓய்வூதியம் பெற முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.