ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவு
ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஆண்டின் முதல் பாதியில், 20 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஊடகம் ஒன்றின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவு
2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை, 115,682 என்கிறது, Welt am Sonntag என்னும் ஜேர்மன் ஊடகம்.
அந்த அறிக்கை, சிரிய மற்றும் ஆப்கன் அகதிகள் வழக்கமாக ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதுண்டு என்றும், சிரிய அகதிகளில் 50 சதவிகிதம் பேரும், ஆப்கனைச் சேர்ந்தவர்களில் 48 சதவிகிதம் பேரும் ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வேயிலும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை சற்றே சரிந்துள்ளதாம்.
2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை, 499,470. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, இரண்டு சதவிகிதம் குறைவாகும்.