;
Athirady Tamil News

பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

0

பிரித்தானியாவில் (Britain) இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை இரத்து செய்வதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அறிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தனது முதல் கொள்கை அறிவிப்பில் கெய்ர் ஸ்டார்மர் இதனை தெரிவித்துள்ளார்.

ருவாண்டா திட்டம் தொடங்குவதற்கு முன்பே இறந்து புதைக்கப்பட்டது. இது ஒரு தடையாக இருந்ததில்லை என்றும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடுப்பாக செயல்படாத வித்தைகளைத் தொடர நான் தயாராக இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமான முறை
சட்ட விரோதமான முறையில் சிறிய படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறி, பிரித்தானியாவிற்கு வந்த குடியேறியவர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அனுப்பும் திட்டத்தை கன்சர்வேடிவ் அரசாங்கம் 2022ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது.

புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

எனினும், பல மாதங்களாக நீடித்தி சட்ட சவால்கள் காரணமாக குறித்த திட்டத்தின் கீழ் யாரும் ருவாண்டாவிற்கு அனுப்பப்படவில்லை.

இந்நிலையிலேயே, ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்
ருவாண்டா திட்டத்தை நிறுத்துவதற்கு பிரச்சாரம் செய்த பல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சரின் CEO Sonya Sceats, ஸ்டார்மரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிய மக்களின் வாழ்க்கையுடன் அரசியல் விளையாடிய இந்த வெட்கக்கேடான திட்டத்தின் கதவை உடனடியாக மூடுவதற்கு ஸ்டார்மரை நாங்கள் பாராட்டுகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.