நேபாளத்தில் கனமழை: பலர் உயிரிழப்பு
நேபாளத்தில் (Nepal) கடந்த 24 மணி நேரத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை அந்நாட்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் டான் பகதூர் கார்க்கி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் உள்ள நேபாளம், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை வழக்கமாக எதிர்கொள்கிறது.
பலத்த மழை
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் இருவரைக் காணவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள கோஷி, கண்டகி (Gandaki) மற்றும் பாக்மதி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும். , எஞ்சிய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு வானிலை நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.