இதை கவனித்தீர்களா? ரிஷியின் பின்னால் L Boardஐ காட்டியபடி நின்ற நபர்
பிரித்தானியாவில் தேர்தலில் தோல்வியடைந்த பிரதமர் ரிஷி சுனக் உணர்ச்சிப்பூவமாக நாட்டு மக்களுக்கு பிரியாவிடை கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, ரிஷிக்குப் பின்னால் L Board ஒன்றை பிடித்துக்கொண்டு ஒருவர் நின்ற காட்சியை பலரும் கவனித்திருக்கலாம்.
i did it for the people. pic.twitter.com/SEoFqGFQYr
— NDL Ringside (@NikoOmilana) July 5, 2024
யார் அந்த நபர்?
பிரித்தானிய பிரதமரின் இறுதி உரையின்போது அவர் பின்னால் நின்றவருடைய பெயர், Niko Omilana. அவர் ஒரு யூடியூபர் ஆவார்.
ரிஷிக்குப் பின்னால் L Board ஒன்றை பிடித்துக்கொண்டு நின்ற வீடியோவை சமூக ஊடகமான எக்சில் வெளியிட்டுள்ளார் நிக்கோ.
தான், மக்களுக்காக அதைச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. (L என்பதை தோல்விக்கு அடையாளமாக நிக்கோ காட்டியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன).
நிக்கோ, ரிஷி போட்டியிட்ட தொகுதியிலேயே சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார். அவருக்கு 160 வாக்குகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.