;
Athirady Tamil News

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 – யாரெல்லாம் உடனே விண்ணப்பிக்கலாம்?

0

இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் படி 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த பணம் மாதம் மாதம் உங்கள் வங்கி கணக்கில் வராது. இது உங்கள் வங்கி கணக்கில் காலாண்டிற்கு ஒருமுறை மொத்தமாக வரும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதும்.

உதவித்தொகை
இதற்கான விண்ணப்பப்படிவங்களை வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) மற்றும்

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒராண்டு கழித்து, 2,3-ம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.