;
Athirady Tamil News

போலந்து எல்லையில் கூடிய சீன-பெலாரஸ் படைகள்! நேட்டோவுக்கு மறைமுக எச்சரிக்கையா?

0

சீனா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளும் போலந்து எல்லைக்கு அருகில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

சீனா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி
நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில், சீனாவும், பெலாரஸ் நாடும் இணைந்து “ஈகிள் அசால்ட்” (Eagle Assault) என்ற பெயரில் இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன.

பெலாரஸின் பிரெஸ்ட்(Brest) நகரத்திற்கு அருகில் நடைபெறும் இந்தப் பயிற்சிகள் ஜூலை 19ம் திகதி வரை நீடிக்கும் என தெரியவந்துள்ளது.//// அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற உள்ள முக்கியமான நேட்டோ உச்சி மாநாட்டின் போது இந்த கூட்டு ராணுவ நடத்தப்படுகின்றன.

நேட்டோ உச்சி மாநாடு உக்ரைனுக்கு இராணுவ மற்றும் நிதி உதவியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதால், கூட்டு ராணுவ பயிற்சிக்கான நேரத் தேர்வு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ராணுவ பயிற்சியின் நோக்கம்
இந்தப் பயிற்சிகள் முழுக்க “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன என பெலாரஸ் அதிகாரிகளின் கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவை இரவு நேர தளப்பாடு, நீர் தடைகளை கடப்பது மற்றும் நகரப் பகுதிகளில் போர் ஆகிய பணிகளை பயிற்சி செய்வதை இவை உள்ளடக்கும்.

பெலாரஸ் இது தொடர்பாக வெளியிட்ட புகைப்படங்களில், சீன துருப்புக்கள் வந்து இறங்குவதையும் உபகரணங்களை இறக்குவதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் பயிற்சிகளின் நோக்கம் இரு நாட்டு படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதும் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பங்கேற்கும் துருப்புக்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.