;
Athirady Tamil News

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதமான துபாய் விமான ஊழியரின் தற்கொலை விவகாரம்

0

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டு துபாய் நீதிமன்றத்தால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

விடுதலை செய்ய கோரிக்கை
தொடர்புடைய விவகாரம் தற்போது அயர்லாந்து அரசியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் 28 வயதான Tori Towey என்ற அயர்லாந்து நாட்டவர். இவர் கொடூரமாக தாக்கப்பட்டதுடன், உடல் முழுவதும் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, Tori Towey துபாய் மாகாண காவல் நிலையம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் மது அருந்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டு அவர் மீது வழக்குப் பதிந்துள்ளதாக கூரப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அயர்லாந்து நாடாளுமன்றத்தில் பேசிய Sinn Féin தலைவர் Mary Lou McDonald, தற்போது Towey-ன் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அயர்லாந்து திரும்ப முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அயர்லாந்தின் பிரதமர் Simon Harris தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் தாம் நடவடிக்கை எடுக்க தயார் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சரகமும் இந்த வழக்கில் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

வன்முறைக்கு பின்னால் யார்
மட்டுமின்றி தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 2023 ஏப்ரல் மாதம் Tori Towey துபாய் சென்றுள்ளார். அங்கு ஒரு வாடகைக் குடியிருப்பில் தமது தாயாருடன் வசித்து வந்துள்ளார். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றியும் வந்துள்ளார்.

அவரை யார் தாக்கினார் அல்லது இந்த வன்முறைக்கு பின்னால் யார் உள்ளனர் என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஜூலை 18ம் திகதி இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

மட்டுமின்றி, அவர் மீது மிக மோசமான வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார் என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சட்டத்தரணி குழு ஒன்று Tori Towey மற்றும் அவரது தாயாருக்கு உதவி வருகிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ராதா ஸ்டிர்லிங் தெரிவிக்கையில்,

Tori Towey மீதான வழக்குகளை கைவிடவும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்கவும், அந்த தாயாரும் மகளும் சொந்த நாடு திரும்பவும் துபாய் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.