இங்கிலாந்தில் பள்ளியில் உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம்: நீடிக்கும் மர்மம்
இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு குழந்தைகள் மரணம்
இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள Millstead Primary School என்னும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, முறையே 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே அந்த பள்ளியில் Giardiasis என்னும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Giardia lamblia என்னும் கிருமியால் பரவும் இந்த தொற்று, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு, வாயுத்தொல்லை, வயிற்று இறுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால், பொதுவாக அது மரணத்தை ஏற்படுத்துவதில்லை. எளிய சிகிச்சை மூலம் அதை குணப்படுத்திவிடலாம்.
ஆகவே, இந்த பிள்ளைகளின் உயிரிழப்புக்கு அந்த கிருமி காரணமாக இருக்காது என நம்புவதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
ஆக, எதனால் அந்த குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. துயரத்தை உருவாக்கியுள்ள அந்த பிள்ளைகளுடைய மரணம் குறித்த விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.